Wednesday, July 8, 2009

அழகிய குதிரை

ஒரு சிறிய அழகான கிராமத்தில் ஒரு முதியவர் ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் ஒரு அழகான குதிரை ஒன்று இருந்தது. அது மிகவும் அழகாக இருத்து, அதன் மீது அந்த ஊர் மக்களுக்கு எப்பொழுதுமே ஒரு
கண் இருந்தது. அழகான ஒரு பொருள் மீது அனைவர்க்கும் ஆசை இருப்பது வழக்கம்தானே, இதுவும் அப்படியே...

மக்களில் பலர் அந்த குதிரையை சொந்தமாக்க முயற்சித்தனர், என்ன விலை கொடுக்கவும் தயாராக இருந்தனர். ஆனால் முதியவர் அந்த குதிரையை தான் மிகவும் விரும்புவதாக கூறி மறுத்து விட்டார்.

ஒருநாள் அந்த ராஜியத்தின் ராஜன் அந்த முதியவர் வீட்டு வழியாக நகர் வலம் வந்தான். அப்பொழுது முதியவரின் குதிரையை பார்த்து அதன் அழகில் மயங்கிவிட்டான். அதனை சொந்தமாக்க முதியவருக்கு ஆயிரம் பொற்காசு தருவதாக கூறினான். ஆனால் முதியவர் தான் அந்த குதிரையை மிகவும் நேசிப்பதாக கூறி ராஜனிடம் மறுத்துவிட்டார். ராஜனும் வருத்ததுடன் சென்றுவிட்டான்.

அந்த நாள் இரவு முதியவரின் குதிரை காட்டுக்குள் ஓடிவிட்டது. குதிரை தொலைந்த செய்தி கேட்டு மக்கள் முதியவரின் வீட்டுக்கு வந்தனர், "ஏய் கிழவா நீ ஒரு முட்டாள், பேசாம நீ நேற்றே அந்த குதிரை ஐ ஆயிரம் பொற்காசு க்கு விற்று இருக்கலாம். பாத்திய இப்ப குதிரை தொலஞ்சுபோச்சு, நீ ஒரு முட்டாள் " என்று கேலிசெய்தனர்.

முதியவர் சொன்னார் " இப்ப என்னிடம் குதிரை இல்லை, அவளவு தான் நான் பார்கிறேன்" என்று கூறி சென்றுவிட்டார்.

மறுநாள் அந்த குதிரை காட்டிலிருந்து பண்ணிரெண்டு காட்டு குதிரைகளை அழைத்துக்கொண்டு முதியவர் வீட்டுக்கு வந்துவிட்டது.

இதனை அறிந்த மக்கள் மீண்டும் முதியவர் வீட்டுக்கு வந்தனர்,
"ஏய் நீ ரொம்ப அதிஷ்டசலியா" உன்கிட்ட இப்ப பதிமூணு குதிர இருக்கு" என வினவினார்.

முதியவர் சொன்னார் "இப்ப என்கிட்ட பதிமூன்று குதிரை இருக்கு அவளவுதான் நான் பார்கிறேன்" என்றார்.
மக்கள் எதோ முனுமுனுத்துவிட்டு சென்றுவிட்டனர்,

மறுநாள் காலை முதியவரின் ஒரே மகன் அந்த காட்டு குதிரையை பழக்க படுத்தும்போது, தனது காலினை உடைத்துகொண்டான்.

மீண்டும் மக்கள் முதியவரின் வீட்டுக்கு வந்தனர் "ஏய் கிழவா பாத்திய
நீ பேராசை பட்டு பன்னண்டு குதிரையும் பழக்க நெனச்ச, இப்ப உன் பையன் கால் தான் உடைஞ்சது" என சாடினர்.

முதியவர் சொன்னார் "இப்ப என் பையன் கால் உடைஞ்சுபோச்சு அவளவு தான் நான் பார்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இரண்டு நாட்களில் பக்கத்து நாட்டு ராஜன், முதியவர் இருக்கும் நாட்டின் மீது போர் தொடுத்தான், படைவீரர்கள் பற்றாகுறை காரணமாக
வீட்டில் உள்ள அனைவரும் போருக்கு வரவேண்டும் என ராஜன் ஆணையிட்டான்.

குழந்தைகள், முதியவர், நுடமானவர் மட்டும் போருக்கு வரவேண்டியது இல்லை என மன்னன் ஆணையிட்டான்.

மக்கள் மீண்டும் முதியவர் வீட்டுக்கு திரளாக குவிந்தனர் "ஏய் நீ அதிஷ்டசாலியா! பாரு நீ வயசானவன் , உன் பையனுக்கு கால் உடைஞ்சு போச்சு, நீங்க போருக்கு போகவேண்டியது இல்ல, ஆனா நாங்க போருக்கு போகணும், உயிர் போகுமோ! கை ,கால் போகுமோ!" சொல்லமுடியாது என வினவினார்,வருத்தப்பட்டனர்.

முதியவர் சொன்னார் " நானும் என் பையனும் இப்ப போருக்கு போகவேண்டியது இல்ல நான் அவளவுதான் பார்க்கிறேன்" என்று சொன்னார்.

ஓஷோ சொன்ன இந்த கதை மிகவும் அழகானது, முதியவர் எதனோடும் தன்னை ஒப்பிட்டு பார்த்து வாழவில்லை, அவர் நிகழ்வை ஏற்றுக்கொண்டர், நிகழ்விலே வாழ்ந்தார். எதிர்பார்ப்பற்று எதனையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார். எனவே மகிழ்ச்சியில் வாழ்ந்தார்.

மிக்க நட்புடன்,
சாய் சுதாகர்,

பூரண வாழ்வு.

என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஜென் கதையினை இந்த தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உளமகிழ்ச்சி அடைகிறேன்.

சான்-சி ஒரு மிகவும் ஆனந்தமான மனிதர். அவர் ஒருநாள் தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு ஒரு பூஞ்சோலை வழியாக சென்றுகொண்டு இருந்தார். அப்பொழுது அங்கே சில சிறுவர்,சிறுமியர்கள் கண்ணாம்பூச்சி ஆட்டம் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.சான்-சியும் அவர்களோடு விளையாட்டில் சேர்ந்துகொண்டார்.

லீ-மிச்சி என்ற சிறுமி தனது சுற்றுக்காக கண்களை மூடிகொண்டி ஒன்று முதல் பத்துவரை எண்ண ஆரம்பித்தாள்.எல்லோரும் தனது பங்குக்கு மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டனர்.சான்-சியும் ஒரு பூச்செடிக்கு பின்னால் மறைவாக ஒளிந்துகொண்டார்.லி-மிச்சி எல்லோரையும் கண்டுபிடித்துவிட்டாள், ஆனால் சான்-சியை மட்டும் அவளால் கண்டுபிடிக்கமுடியவில்லை.பொழுது சாய்ந்துவிட்டதால் குழந்தைகள் விளையாட்டை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும் குழந்தைகள் மீண்டும் விளையாடவந்தனர்,
லீ-மிச்சி தன் சுற்றுக்கு இந்தமுறையும் கண்களை மூடி எண்களைவாய்விட்டு எண்ண ஆரம்பித்தால், குழந்தைகள் எல்லோரும் மீண்டும் ஒளிந்துகொண்டனர்.லீ-மிச்சி எல்லோரையும் கண்டுபிடிக்க புறப்பட்டால், அப்பொழுது பூச்செடிக்கு பின்னால் மறைந்து இருந்த சான்-சி ஐ கண்ண்டுபிடித்து முதுகில் தட்டினால், சான்-சி கண்டுபிடிக்கப்பட்ட கணத்தில் "நான் மாட்டிகிட்டேன் !! நான் மாட்டிகிட்டேன் " என்று ஆனதத்தில் துள்ளி குதித்தார், பரவசத்தில் குலுங்கி குலுங்கி சிரித்தார்......

இதில் விந்தை என்னவென்றல் அவர் நேற்றில் இருந்து லீ-மிச்சி எதிர்பார்த்து அதே இடத்தில் இப்பொழுதுவரை ஒளிந்து இருந்தார்.கணத்துக்கு கணம் முழு ஆவலோடு அவளை எதிர்பார்த்து இருந்தார்,

சான்-சி ன் இந்த கள்ளமில்லா தன்மைக்கு, வாழ்வின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டிற்கு முன்னே உலகின் அதிபுத்திசாலிதனமும், மேதமை அறிவும் எள்ளலளவும் ஒப்பிடமுடியாமல் வெகுதொலைவில் பின்னுக்கு நின்றுவிடுகிறது. . சான்-சி வாழ்வை முழுமையாக ஆவலுடன் காத்து இருந்து நேசிக்கிறார்.

சான்-சி ஐ போல வாழ்வதே " ஜெனில்வாழ்வதாகும்".
இதுவே பூரணவாழ்வாகும்.

மிக்க அன்புடன்,
சாய் சுதாகர்,

Sunday, July 5, 2009

நட்புடன்

எனது கருத்துகளையும், விமர்சனங்களையும் உங்களுடன் பகிர்த்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.